பட்டர் காஃபி பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.? என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.?!
பலரும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் வெறும் வயிற்றில் இவ்வாறு டீ, காபி குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக கருதி வருகிறோம்.
இவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக பட்டர் காபி குடிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பட்டர் காபியை எப்படி செய்யலாம் மற்றும் இதன் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
பட்டர் காபி செய்முறை
தண்ணீர் - 2 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
காபி தூள் - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் காபி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்பு டம்ளரில் கொதிக்க வைத்த காபி, தேங்காய் எண்ணெய், லவங்க பட்டை தூள், பட்டர் சேர்த்து பிளண்டர் வைத்து நன்றாக நுரை ததும்பும் வரை கலக்க வேண்டும். (பிளென்டருக்கு பதிலாக மிக்ஸியும் உபயோகப்படுத்தலாம்) இவ்வாறு செய்தால் சுவையான பட்டர் காஃபி ரெடி.
பட்டர் காபியின் நன்மைகள்
கீட்டோ டயட், பேலியோ டயட் போன்ற டயட் முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பட்டர் காபி. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பட்டர் காபி அருந்தலாம். பட்டர் காபியில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளதால் உடலில் புரதச்சத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைப்பதோடு, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரி செய்கிறது.