மூட்டு வலியை சில நிமிடங்களிலேயே குறைக்கும் அதிசய நீர்.! வாங்க தெரிஞ்சிக்கலாம்.!?
அரிசி வகைகளில் ஊட்டச்சத்து நிறைந்த பல வகையான அரிசிகள் இருந்து வருகின்றன. இவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த அரிசிகளில் ஒன்றுதான் பார்லி அரிசி. அரிசியை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. இந்த பார்லி நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்பதை குறித்து தெளிவாக பார்க்கலாம்?
பார்லிநீரில் மெக்னீசியம், அமினோ அமிலங்கள், புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பார்லிநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இதன் மூலம் உடலுக்கு சீராக ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை வேகமாக செயல்பட தூண்டுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதால் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பார்லி தண்ணீர் மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனை மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை பார்லி தண்ணீர் சரி செய்கிறது. இதில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் கலந்து எலும்புகளை பலப்படுத்துவதால் உடலில் உள்ள வலியை உடனடியாக குணப்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.