For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குருதிநெல்லி தேநீர் பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா.? என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.?

08:10 AM Jan 25, 2024 IST | 1newsnationuser5
குருதிநெல்லி தேநீர் பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா   என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா
Advertisement

பெர்ரி பழவகைகளில் ஒன்று தான் குருதிநெல்லி( cranberry) பழமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், கலோரிகளும் நிறைந்துள்ளன. குளிர் பகுதிகளில் மட்டுமே அதிகமாக விளையும் இந்த பழங்களில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது.  சுவையானதகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் இந்த குருதி நெல்லி தேநீர் பல நோய்களை தீர்க்கும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

தினமும் காலைலயில் எழுந்து டீ அல்லது காபி குடிப்பதற்கு பதில் இவ்வாறு பழங்களினால் தயாரிக்கப்பட்ட டீ குடிப்பது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை தரும். மேலும் குருதி நெல்லி டீ அடிக்கடி குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி நோய்கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது. ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் என்னென்ன நன்மைகள் தரும் என்பது குறித்து பார்க்கலாம்

1. உடலில் உருவான அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. குறுதிநெல்லி டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
4. தூக்கமின்மையை கட்டுப்படுத்தி மனபதட்டம், மனகுழப்பம் போன்றவற்றை சரி செய்கிறது.
5. வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6. முடி உதிர்தல், தோலில் அலர்ஜி, போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

குருதி நெல்லி டீ செய்முறை

முதலில் குருதி நெல்லியை நன்றாக வெயிலில் உலர வைத்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பொடியை 1ஸ்பூன் அளவு போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பின் ஒரு டம்ளரில் வடிகட்டி அதில் எழுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குடித்து வரலாம்.

Tags :
Advertisement