வாழைப்பழ தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா.? இத்தனை நாளா தெரியாம போச்சே.!
நம்மில் பலரும் முக அழகிற்காக நிறைய கடைகளில் இருக்கக்கூடிய கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதில் இருக்கின்ற கெமிக்கல் நமது முகத்தின் இயற்கை அழகை கொன்றுவிடுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. இதன் காரணமாக ஆரோக்கியமான செல்கள் அழிந்து விரைவிலேயே நமக்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். இயற்கையான பொருட்களைக் கொண்டு முக அழகை மேம்படுத்தினால் அதற்கான ரியாக்ஷன் தாமதமாக வந்தாலும் கூட நிரந்தரமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அப்படி எந்தெந்த பொருட்களைக் கொண்டு இயற்கையாக நமது முக அழகை மேம்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியக்கூடிய வாழைப்பழத் தோலை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்தலாம். வாழைப்பழத் தோலை ஈரமாக இருக்கும் உள்பகுதியை முகத்தில் நன்றாக தேய்த்து கொள்ளவும். அரைமணி நேரத்திற்கு பின், சுத்தமான நீரில் கழுவிவிடவும். இந்த முறையில் அடிக்கடி முகத்தை நாம் பராமரிக்கும் போது, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக தோற்றமளிக்கும். வாழைப்பழத்தோலை சிறிய துண்டுகளாக வெட்டி, முக பருக்கள் மற்றும் தழும்புகள் இருக்கின்ற இடங்களில் பூசி, மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து மிதமான நீரில் ஒரு காட்டன் துணியை தொட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
அன்றாடம், இது போல செய்து வந்தால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் குணமடையும். மேலும், கருவளையம், கண்ணில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முக வீக்கங்கள் குறைய வேண்டுமெனில், வாழைப்பழத்தோலின் உள்ளே இருக்கும், வெள்ளை நார்ப்பகுதியை கத்தாழை ஜெல்லுடன் சேர்த்து, கண்களுக்கு அடியில் பூசி, ஈரமான காட்டன் துணியால் சுத்தம் செய்ய வேண்டும். பற்களில் வாழைப்பழ தோலை தேய்த்து வந்தால், பற்கள் நன்றாக பளிச்சென மாறும். கொசுக்கடித்த இடங்களில் இருக்கும் வீக்கத்தில் இந்த வாழைப்பழ தோலை வைத்தால் சற்று நேரத்தில் அந்த இடம் சரியாகிவிடும். மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் வாழைப்பழத் தோலை கண்ணை மூடி அதற்கு மேல் வைத்துக் கொண்டிருந்தால் சற்று நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.