முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்டா மாற்றம்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! மக்களே இனி கவலை வேண்டாம்..!!

A 'first come first served' procedure is to be followed in case of lease transfer applications with clause.
09:55 AM Jun 18, 2024 IST | Chella
Advertisement

பட்டா மாற்றம் செய்வதற்கு பயன்படும் விண்ணப்பம் குறித்து தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் ஆகிய விண்ணப்பங்களுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட்டு அவற்றின் மீது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இணைய வழியில் சுமார் 81.76 லட்சம் பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

பொதுமக்களுக்கு இந்த சேவைகளை கூடுதலான வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 4.6.2024 முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறையில் 4.6.2024 முதல் 16.6.2024 வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் 'முதலில் வருவோருக்கு முதலில் சேவை' என்ற நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இரண்டு வகையான விண்ணப்பங்களுக்கும் ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read More : அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீண்டும் நியமனம்..!! திமுக தலைமைக் கழகம் அதிரடி அறிவிப்பு..!!

Tags :
Tamilnaduதமிழ்நாடு அரசுபட்டா மாற்றம்விண்ணப்பம்
Advertisement
Next Article