முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்’..!! ’சிறப்பு பூஜையை தடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வெடிக்கும்’..!! அண்ணாமலை எச்சரிக்கை..!!

07:15 AM Jan 22, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை பிரதமர் மோடி முன்னிலையில் இன்று நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு தடை உத்தரவு போட்டிருப்பதாக நாளிதழ் செய்தியைக் குறிப்பிட்டு, திமுக அரசு செய்வது இந்து விரோத செயல் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisement

இதற்கு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் விதிக்கவில்லை” என்று தெரிவித்தார். இந்நிலையில், திமுக அரசுக்கு ஆணவம் அதிகம் ஆகிவிட்டதாகவும், மக்களின் வழிபாட்டு நெறிமுறைகளில் கை வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``அமைதியான முறையில் கோயிலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் திமுக கை வைப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமதியெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் என்ன நிறுத்துகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். எல்லா கோயில்களிலும் பூஜை செய்யுங்கள் மக்களுக்குத் திருப்தியாக சாப்பாடு போடுங்கள் என்று பாஜக நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறோம்.

யார் தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். இதைத் தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். உங்களுடைய (முதல்வர் ஸ்டாலின்) மகன் நடத்தும் விழாவுக்குத் தமிழ்நாட்டின் பேருந்துகளை எல்லாம் திருப்புகிறீர்கள். தங்கை கொடியேற்றுகிறார், மகன் நிகழ்வு நடத்துகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு குடும்ப விழா போல இளைஞரணி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தமிழக அரசு அனுமதி கொடுக்கும். ஆனால், கோயிலுக்குள் நடக்கிற நிகழ்வுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது.

எங்களின் தொண்டர்கள் அனைவரிடத்திலும் தடையை மீறி இறங்குங்கள் என்று சொல்லி இருக்கிறோம். எல்லாம் ஓரளவுக்குதான் பொறுக்க முடியும். ஒழுக்கமாக நடந்து கொண்டால் தான் அரசுக்கு மரியாதை. அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் அரசுக்கு மரியாதை கிடையாது” என்று அண்ணாமலை கட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags :
அண்ணாமலைஅயோத்திசிறப்பு பூஜைநேரடி ஒளிபரப்புராமர் கோயில்
Advertisement
Next Article