முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தாய்ப்பாலில் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்!! முகம் பளபளனு மாற இதை ட்ரை பண்ணுங்க!!

05:20 AM May 20, 2024 IST | Baskar
Advertisement

தாய்ப்பால் ஒரு அற்புதமான இயற்கை மெடிசன். இதில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. தாய்ப்பால் பல மருத்துவ குணங்களையும் கொண்டது.

Advertisement

தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு குழந்தையின் வளர்ச்சி,ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் உள்ள அழகு குறிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1)முக வீக்கத்திற்கு தாய்ப்பால்:

குழந்தை தாய்ப்பால் குடிக்காத நேரத்தில் பால் கட்டி கொள்ளாமல் இருக்க அதனை முகத்திற்கு பயன்படுத்தலாம். தாய்ப்பாலில் இயற்கையாகவே முகத்தில் ஏற்பட்ட வீக்கத்தை போக்கும் தன்மை உண்டு. அத்துடன் சேர்த்து கருவளையங்களையும் காணாமல் போக செய்யும். தாய்ப்பாலை காட்டன் துணியால் வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் வீக்கம் குறையும்.

2) பருக்கள் மறைய தாய்ப்பால்:

தாய்ப்பாலில் ஃபேஸ் வாஷ் செய்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், கீறல்கள் குணமடையும். தாய்ப்பாலில் அதிகம் லாரிக் அமிலம் உள்ளதால் சருமத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும். தினமும் தாய்ப்பாலில் முகத்தை கழுவினால் மங்கிப்போன உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் மாறிவிடும். ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து கொண்டு அதனை முகத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். கண்டிப்பாக உங்கள் கலை இழந்த முகம் வெண்மையாக மாறும்.

3) மென்மையான உதடு:

குளிர் காலம் என்றாலே உதடுகள் ஈர்ப்பதமின்றி காய்ந்து விடும். அத்துடன் சேர்த்து உதடுகளில் வெடிப்புகள் வர கூடும். அதிக ஆன்டி செப்டிக்,ஆன்டி பாக்டீரியல் தன்மையுடைய தாய்ப்பால், சருமம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வை தரும். அதில் ஒன்றுதான் பனி வெடிப்பு. வறண்டு போன உங்கள் உதடுகளில் தாய் பாலால் ஒத்தடம் கொடுத்தால் ஈர்ப்பதுடன் எப்போதும் இருக்கும். மேலும் உதடுகள் வெடிப்பு வந்து புண் ஆவதை தடுக்கும்.

4) மாஸ்க்:

சிறிது முல்தானி மெட்டியை எடுத்து கொண்டு அதனுடன் தாய்ப்பாலை சேர்த்து கலக்கவும். பிறகு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் 15 நிமிடம் போட்டு கழுவவும். இது முகத்திற்கு அதிக மினுமினுப்பை தந்து அழகூட்டும். அரிப்புகள் கொண்ட சருமம் இதனால் குணமடையும். அத்துடன் எப்போதும் குளுமையாக இருக்கவும் செய்யும்.

Read More: ‘என் உதடு என் இஷ்டம்’ – உதட்டு சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை!

Tags :
breast milkஅழகு குறிப்பு
Advertisement
Next Article