காதலனை அடித்து துரத்திவிட்டு காதலியை காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!
காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, காதலியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், கட்டிடத் தொழிலாளியாக கூலி வேலை செய்து வருகிறார். இவரது காதலன் ஆட்டோ டிரைவர். புத்தாண்டையொட்டி, தன்னுடைய காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் அந்த பெண். பிறகு புத்தியேந்தல் என்ற பகுதியில் இருவரும், ஆட்டோவை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதை புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கவனித்துள்ளனர். மேலும், மது அருந்தி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் காதல் ஜோடியிடம் சென்ற அந்த கும்பல், "இந்த நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று மிரட்டியிருக்கிறது. பிறகு, காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தனியாக மாட்டிக் கொண்டதால் போதை கும்பலிடம் இருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடியாமல் போகியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னை 4 இளைஞர்கள் தாக்கி, கூட்டு பலாத்காரம் செய்துவிட்டதாக மருத்துவர்களிடம் கூறி அழுதுள்ளார். உடனயாக இந்த தகவல், மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அந்த 4 இளைஞர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இறுதியில், புவனேஷ்குமார் (வயது 27), சரண்முருகன் (29), செல்வகுமார் (27), குட்டி என்ற முனீஸ் கண்ணன் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை வரும் 10ஆம் தேதி வரை ராமநாதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.