ரெடியா இருங்க!... அடுத்த 2ஜி ஆடியோ வெளியிடவுள்ளேன்!… இதை மறுத்தால் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்!… Annamalai பேச்சு!
Annamalai: 2 ஜி தொடர்பான ஆடியோவை விரைவில் வெளியிடப் போகிறேன். அதை மட்டும் ஆ. ராசா மறுத்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்க்கட்சியினர் மீது அனல் கக்கி வருகின்றனர். அந்த வகையில், திமுக மீதான விமர்சனத்தையும், குற்றச்சாட்டையும் பாஜக மழையாக பொழிந்து வருகிறது. குறிப்பாக, மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஒவ்வொரு நகர்வையும் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், கனிமொழி மீதும், ஆ. ராசா மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கனிமொழியை ஓசியில் வாழ்பவர் என்றும், உழைத்து வாழாதவர் எனவும் விமர்சித்தார். மேலும், அவரது அப்பாவின் (கருணாநிதி) பெயரை எடுத்துவிட்டால் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில், ஆ. ராசா குறித்தும் அவர் விமர்சனத்தை முன்வைத்தார். நான் ஆ. ராசா குறித்த 2ஜி ஆடியோ ஒன்றை வெளியிடப் போகிறேன். அந்த ஆடியோவை அவர் மறுத்தால் அரசியலில் இருந்து இந்த நிமிஷமே நான் போய் விடுகிறேன் என அண்ணாமலை கூறினார்.