"அடக்கமா இல்லனா சினிமா அடக்கிரும்."! அமீர்-ஞானவேல் ராஜா விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பேட்டி.!
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பரபரப்பான விவாதமாக மாறி இருக்கிறது. கிரீன் ஸ்டுடியோ என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பல தேசிய விருதுகளையும் வாங்கியது. அந்தத் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகளான நிலையில் அந்தத் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பண பிரச்சனை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் கார்த்தியின் 25 வது திரைப்பட விழாவின் போது இயக்குனர் அமீர் அழைக்கப்படாதது பற்றி எழுப்பிய கேள்வி தற்போது மிகப் பெரிய பஞ்சாயத்தாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பேட்டியளித்த ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இதற்கு இயக்குனர் சசிகுமார் சமுத்திரக்கனி கரு பழனியப்பன் மற்றும் பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தது குறித்தும் அவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை இவர் தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமீர் விவகாரம் குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி இருக்கிறார். மேலும் ஞானவேல் ராஜா எப்போதும் திமிர் பிடித்தவர் தான் என்றும் அவரது பேச்சுக்கள் இதுபோன்று இருப்பது தனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். ஒரு தயாரிப்பாளர் 20 படங்களுக்கு மேல் ஹிட் கொடுத்தால் அடக்கமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சினிமா அடக்கி விடும் எனவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற விவகாரத்தில் படத்தின் ஹீரோ பேசினால் மட்டுமே நடந்த உண்மை என்ன என்று தெரியவரும் எனவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். அஜித் போன்ற பெரிய நடிகர்களே ஏமாற்றும் போது ஞானவேல் ராஜா ஏமாற்றி இருக்க மாட்டாரா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.