உஷார்!. லிஃப்ட்டுக்குள் பேட்டரியை எடுத்து சென்ற நபர்!. வெடித்து சிதறியதால் பறிபோன உயிர்!
Lithium Battery : லிஃப்ட்டுக்குள் லித்தியம் பேட்டரியை எடுத்துசென்றபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
மின்னணு சாதனங்கள் கையடக்க, போன்ற கைபேசிகள்இ மின்சார கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆபத்தை உணராமலும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு இல்லாமலும் மக்கள் அதிகளவில் கையாண்டு வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், நபர் ஒருவர் லித்தியம் பேட்டரியை எடுத்துக்கொண்டு லிஃப்ட்டுக்குள் நுழைந்தார். பின்னர் கதவுகள் மூடப்பட்டதும், அந்த லித்தியம் பேட்டரி வெடித்து சிதறி தீப்பற்றியது. கதவு மூடப்பட்டதால் வெளியே வரமுடியாமல் அந்த நபர் லிஃப்ட்டுக்குள்ளேயே உடல்கருகி உயிரிழந்தார். இந்த வீடியோ நெட்டிசன்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. லித்தியம் பேட்டரிகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவதும் மற்றும் பாதுகாப்பு பரிந்துரைகளை கடைபிடிப்பதும் அவசியம்.
பேட்டரி ஏன் வெடித்தது? பேட்டரி அதிகமாக வெப்பமடையும் போது, ஒரு இரசாயன சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது, இது இன்னும் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது, இது பேட்டரியில் இருக்கும் எரியக்கூடிய பொருட்கள் தீப்பிடிப்பதற்கு காரணம். பேட்டரியில் உள்ள ஒரு குறுகிய சுற்று தீவிர மற்றும் விரைவான வெப்பத்தை உருவாக்கலாம், இது வெடிப்பு செயல்முறையைத் தூண்டும்.
Readmore: கார்கில் விஜய் திவாஸ் 2024!. டைகர் ஹில் வெற்றி அனுபவங்களை பகிர்ந்த பிரிகேடியர் குஷால் தாக்கூர்!