For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்!. மலேரியா பரவல் திடீர் அதிகரிப்பு!. சூழ்நிலை மோசமாகும்!. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

06:10 AM Jul 27, 2024 IST | Kokila
உஷார்   மலேரியா பரவல் திடீர் அதிகரிப்பு   சூழ்நிலை மோசமாகும்   மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
Advertisement

Malaria: கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திடீர் மலேரியா காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், சூழ்நிலை மோசமாகும்' என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரியில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மக்களை டெங்கு அச்சுறுத்தி வரும் நிலையில், திடீரென மலேரியா பரவல் அதிகரித்துள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று முன்தினம், பெங்களூரு விகாஸ் சவுதாவில், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கடும் நடவடிக்கை எடுத்து, நோயை கட்டுப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பெங்களூரில் மலேரியா ஏறுமுகமாகிறது. மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோரில், 80 சதவீதம் பேருக்கு டெங்கு, 20 பேருக்கு மலேரியா கண்டுபிடிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்தா விட்டால், சூழ்நிலை மோசமாகும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது, மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம், தலைவலி, உடல் வலி, வாந்தி இருக்கும். டெங்குவுக்கும் இதே அறிகுறி தென்படும். எனவே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால்தான், என்ன நோய் என்பது தெரியும். அதற்கு சிகிச்சை பெறலாம். மழைக்காலம் என்பதால், பல நோய்கள் ஏற்படும். நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. விரைந்து சிகிச்சை பெறாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் கூறினர்.

Readmore: யுனெஸ்கோ பாரம்பரிய பட்டிலில் அசாமின் ‘மொய்தாம்’ சேர்ப்பு!.

Tags :
Advertisement