For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்..!! மின்னல் வேகத்தில் பரவும் சுவாச நோய் பாதிப்பு..!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை..!!

05:25 PM Nov 24, 2023 IST | 1newsnationuser6
உஷார்     மின்னல் வேகத்தில் பரவும் சுவாச நோய் பாதிப்பு     மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை
Advertisement

சீனாவில் திடீரென சுவாச நோய் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா ஒட்டுமொத்தமாக உலகையும் ஆட்டிப்படைத்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ரொம்பவே அதிகம். கொரோனாவின் தோற்றமே இதுவரை மர்மமாகவே இருந்து வரும் நிலையில், சீனாவில் புதுவித பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது.

சீனாவில் பெய்ஜிங், லியோனிங் ஆகிய இரு பகுதிகளில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அங்கு மீண்டும் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கூட சீனாவிடம் விளக்கம் கேட்டது. ஆனால், சீன மருத்துவர்கள் அசாதாரண பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

சீனாவில் இப்படி சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் H9N2 பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு. எதாவது சிக்கல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார வட்டாரங்கள் கூறுகையில், "சீனாவில் தற்போதைய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, அவை வைரஸ்களின் காக்டெய்ல் போல இருக்கிறது. இதுவே சீனாவில் அதிகப்படியான பேருக்குப் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. கொரோனா போல இது ஜூனோடிக் வைரஸ் இல்லை" என்று தெரிவித்தனர்.

அதாவது கோவிட் 19 ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்பது விலங்கிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். அதைத்தான் ஆய்வாளர்கள் ஜூனோடிக் வைரஸ் என்று அழைக்கின்றனர். சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், எங்கு மீண்டும் கொரோனாவை போன்ற பாதிப்பு ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சினர். இருப்பினும், அவை கொரோனா போன்றது இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement