முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார் மக்களே!. வளர்ப்பு நாயின் சின்ன கீறல்தான்!. பெண்ணின் உயிரை பறித்த சோகம்!.

Be careful people! A pet dog's small scratch! The tragedy that took the woman's life!
07:28 AM Aug 11, 2024 IST | Kokila
Advertisement

Rabies: கேரளாவில் வளர்ப்பு நாயின் நகத்தால் கையில் கீறல் ஏற்பட்டு வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் Chenthapporu பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மனைவி ஜெய்னி (44). இந்தநிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இவரது வளர்ப்பு நாய், ஜெயினியின் மகளை கடித்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக நாயின் நகத்திலிருந்து ஜெயினிக்கும் கையில் கீறல் ஏற்பட்டது. இருப்பினும், மகள் மருத்துவமனைக்குச் சென்று அதே நாளில் தடுப்பூசி போட்டாலும், ஜெயினி தன் கையில் கீறலைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ரேபிஸுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, ஒரு மாதம் கழித்து செல்லப்பிராணி இறந்தது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஜெயினி உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மறுநாள் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு வெறிநோய் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்ததை அடுத்து, வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். ஜெய்சிக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்து சிகிச்சையைத் தொடங்கிய போதிலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

Readmore: நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகை இல்லை!. ஏன் தெரியுமா?

Tags :
A pet dog's scratchKeralarabieswomen dead
Advertisement
Next Article