உஷார்!. டூத் பிரஷ்களில் 600க்கும் மேற்பட்ட வைரஸ்கள்!. ஆய்வில் அதிர்ச்சி!
600 Viruses: டூத் பிரஷ்கள் மற்றும் ஷவர்ஹெட்களில் 600க்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
நம் வீட்டின் மற்ற இடங்களை போலவே குளியலறையை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். எனினும் குளியலறையை சுத்தமாக வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. குளியலறையை சுத்தமாக வைக்கவில்லை எனில் பல்வேறு நோய்கள் பரவும். அந்தவகையில், தற்போது புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குளியலறையில் நம்பமுடியாத அளவிற்கு பலவிதமான வைரஸ்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை இதற்கு முன் பார்த்திராதவை என ஆச்சரியமூட்டும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, ஷவர்ஹெட்ஸ் மற்றும் டூத் பிரஷ்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 600க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான வைரஸ்களைக் கண்டறிந்துள்ளனர். ஃபிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயோம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியும் வித்தியாசமானது என்பதைக் காட்டுகிறது. இரண்டு ஷவர்ஹெட்கள் அல்லது டூத் பிரஷ்களில் ஒரே மாதிரியான வைரஸ்கள் இல்லை என்பது ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த வைரஸ்கள் மனிதர்களை பாதிக்காது என்றும் இவை பாக்டீரியோபேஜ்கள் என்று அழைக்கப்படுகிறது என்றும், இந்த வைரஸ்கள் பாக்டீரியாவை குறிவைக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு பதிலளிக்காத நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த பேஜ்கள் அவற்றின் சாத்தியமான பயன்பாட்டிற்காக சமீபத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதுகுறித்து, முன்னணி விஞ்ஞானி எரிகா எம். ஹார்ட்மேன் கூறினார். "எங்களுக்கு அதிகம் தெரியாத பல வைரஸ்களை நாங்கள் கண்டுபிடித்தோம், மேலும் பலவற்றை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பல்லுயிர் குளியலறையில் உள்ளது என்று கூறினார். இது காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும். எதிர்காலத்தில், விஞ்ஞானிகள் இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க இந்த வைரஸ்களைப் பயன்படுத்த முடியும்.
Readmore: பாரசிட்டமால் உட்பட 50 மருந்துகளை தடை செய்யவில்லை!. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் விளக்கம்!