For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’..!! இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!! - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

01:48 PM Apr 26, 2024 IST | Chella
’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’     இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை       வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
Advertisement

தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மே 5ஆம் தேதி முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும். மேலும், உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரனம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம். எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.

கோடை காலத்தில் பொதுவாகக் காபி மற்றும் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை. வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்கள் அருந்தலாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம். ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

Read More : ’இது இருந்து என்ன புண்ணியம்’..? ’வருவாய் குறையுதே’..!! மூடப்படுகிறதா சார் பதிவாளர் அலுவலகம்..?

Advertisement