உஷார்!. எமனாக மாறிய வறுத்த பொட்டுக்கடலை!. சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
Roasted gram: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறுத்த பொட்டுக்கடலை சாப்பிட்ட சிறிதுநேரத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்டம் தானா நர்சேனா பகுதியில் உள்ள முகமதுபூர் பர்வாலா கிராமத்தை சேர்ந்தவர் கலுவா சிங்(50). இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடந்த 24ம் தேதி மாலை, சந்தை வண்டியில் கொண்டுவரப்பட்ட பொட்டுக்கடலையை வாங்கியுள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு சென்று அதை வறுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது . இதையடுத்து, நேற்று காலை 50வயதான தாத்தா கலுவா சிங், 8 வயது பேரன் லவிஷ் ஆகியோர் திடீரென உயிரிழந்தனர். இதில கவலைக்கிடமான நிலை இருந்த மருமகள் ஜோகேந்திராவும் உயிரிழந்தார். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், தாத்தா பேரன் இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யமாலேயே தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மருமகள் ஜோகேந்திராவின் உடல் பிரேதபரிசோதனை செய்தால்தான் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், இரவு அவர்கள் சாப்பிட்ட பொட்டுக்கடலை மற்றும் பிற உணவுப் பொருட்களின் மாதிரிகளும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுத்த பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Readmore: தோற்றால் EVM மிஷினில் மோசடி என்பீர்கள்!. ஜெயித்தால் இல்லை என்பீர்களா?. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!