உஷார்!. தூங்கும்போது இதை செய்யாதீர்கள்!. புற்றுநோய், கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் அபாயம்!.
Mosquito repellent: மழைக்காலம் வந்தாலே போதும். கொசுக்கள், ஈக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் விரைவில் சொறி , மலேரியா மற்றும் டெங்கு போன்ற பல தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்துவிடும். கொசுக்களை விரட்ட மக்கள் பல்வேறு வழிகளை முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கொசு சுருளில் இருந்து ஏற்படும் புகை, நம் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். இது சருமத்தில் கட்டிகள், பருக்கள் மற்றும் தடித்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். கொசு விடட்டியில் இருந்து வெளிவரும் புகை, சிகெரெட் புகைக்கு நிகரானது என்றும், இதனை சுவாசித்தால் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் வரலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்துமா, மூச்சு திண்றல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது. இது உயிர் இழப்புக்கும் வழிவகுக்கலாம். கொசு விரட்டியில் இருந்து வெளியேறும் புகையானது கண் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இது கண்களில் எரிச்சல், பார்வை குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். மேலும், குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் சிசுவைக் கூட பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: “இதயத்தில் சிறிய மூளை”!. மூளையை போல இதயம் எப்படி செயல்படுகிறது?. ஆய்வில் ஆச்சரிய தகவல்!