உஷார்!. குளிர்காலத்தில் கீசர் பயன்படுத்துகிறீர்களா?. விபத்து ஏற்படும் அபாயம்!. பாதுகாப்பு டிப்ஸ் இதோ!
Geysers: குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்த நவம்பர் மாதத்திலேயே மக்கள் குளிர்ச்சியை உணர ஆரம்பித்துள்ளனர். குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் கடினமான செயலாகிறது. அதனால்தான் தண்ணீரை சூடாக்க மக்கள் கீசரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கீசரைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கீசரால் விபத்துகளும் நடப்பது பலமுறை பார்த்ததுண்டு. அதனால்தான் கீசரைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கீசரை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். நீங்கள் கீசரை இயக்கினால், சில நிமிடங்களில் தண்ணீர் சூடாகிவிடும். இதன் காரணமாக நீங்கள் எளிதாக குளிக்கலாம். ஆனால் பல சமயங்களில் ஆன் செய்த பிறகு நீண்ட நேரம் அணைக்காமல் இருப்பார்கள். சில நேரங்களில் கீசரும் வெடிக்கும். அதனால்தான் கீசரைப் பயன்படுத்தும் போது, அது நீண்ட நேரம் ஆன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடையில் கீசரை அணைப்பது மிகவும் அவசியம்.
சான்றளிக்கப்பட்ட நிறுவனத்திடம் மட்டும் வாங்கவும்: பெரும்பாலும் மக்கள் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த மலிவான கீசர்களை வாங்குகிறார்கள். பின்னாளில் அது அவர்களுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஏனெனில் உள்ளூர் நிறுவனங்களின் கீசர்களில் பாதுகாப்புத் தரங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மேலும் இதுபோன்ற கீசர்கள் பழுதடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு, விபத்துகள் ஏற்படும் என்ற அச்சமும் அதிகமாக உள்ளது.
குளியலறையின் மேற்புறத்தில் கீசரைப் பொருத்தவும்: குளியலறையில் சரியான இடத்தில் கீசரைப் பொருத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் கீசர்களால் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் கீசரில் தண்ணீர் விழுவதால்தான் நடக்கிறது. அதனால்தான் தண்ணீர் செல்ல முடியாத குளியலறையின் மேற்புறத்தில் கீசரைப் பொருத்த வேண்டும்.
Readmore: கட்டுக்கடங்காத கலவரவம்!. மணிப்பூர் விரையும் 5,000 துணை ராணுவ வீரர்கள்!. அமித் ஷா அதிரடி!