உஷார்!. சீனப்பொருட்களை பயன்படுத்துகிறீர்களா?. நம் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் அதிர்ச்சி!
Chinese products: நம் பயன்படுத்தும் சீனப் பொருட்கள், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ரேடார் மூலம் கண்காணிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்கிவருகிறது. அந்தவகையில், அச்சு அசல் போலவே தோற்றமளிக்கும் சீனாவின் எலெக்ட்ரானிக் உபகரணங்களை அறிந்திருப்போம். குறைந்த விலையில் கிடைக்கும் சீனத்து ஸ்மார்ட் போன்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்தியர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்ல பிளாஸ்டிக் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் சீனாவின் கைங்கர்யம் இருந்து வருகிறது. இந்த வரிசையில் அண்மையில் சீனாவின் போலிப் பூண்டும் இந்தியர்களை அலற வைத்திருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன பொருட்களின் மூலமாக 79 சதவீத இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள், போட்டோ , மற்றும் வீடியோ போன்ற விவரங்களை ரேடார் மூலம் சீனா கண்காணிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் 21 சதவீத குடும்பங்கள் சீன நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்பதும் அதே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Readmore: ஈ-யின் மூளையில் இத்தனை ரகசியங்களா?. 1.30 லட்சம் கம்பிகள்!. 50 லட்சம் இணைப்புகள்!. ஆய்வில் ஆச்சரியம்!