உஷார்!. இந்த வார்த்தைகளை கூகுளில் தேடாதீர்கள்!. ஆன்லைனில் புதிய மோசடியில் இறங்கிய ஹேக்கர்கள்!.
Google: நவீன வாழ்க்கைக்கு ஏற்ப தொழில்நுட்பம் பெருகி வருகிறது. இதனை தொடர்ந்து மோசடிகளும் அதிகரித்தே வருகிறது. யூடியூப் வீடியோக்கள், லிங்க்குகள், செயலிகள் உள்ளிட்டவைகள் மூலம் ஹேக்கர்கள் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரும் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி கொண்டேயிருக்கிறார்கள். எனினும், தொழில்நுட்ப மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், மால்வேரை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதாக பகீர் தகவல் கிளம்பியிருக்கிறது.. கம்ப்யூட்டர்கள், நெட்வொர்க்குகள், கேஜெட்களை சேதப்படுத்துவதற்காக வெளிப்படையாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர்தான் மால்வேர்.. இதனை பயன்படுத்தியே ஹேக்கர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுகிறார்களாம்.
எனவே, நியூயார்க் போஸ்டின்படி, கூகுளை அதிகமாக பயன்படுத்துபவர்கள், குறிப்பாக இந்த 6 வார்த்தைகள் தேடவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான SOPHOS,, தங்கள் கணினியின் தேடுபொறியில் குறிப்பிட்ட 6 வார்த்தைகளை உள்ளிடும் பயனர்களை குறிவைத்து, புதிய ஹேக்கிங் நடப்பதாக எச்சரித்துள்ளது.
அதாவது, ஹேக்கர்கள் கூகுள் தேடல்களில் "ஆஸ்திரேலியா" என்ற வார்த்தையை பயன்படுத்தும் பயனர்களை குறி வைக்கிறதாம். இந்த சைபர் தாக்குதலுக்கு அந்த நாட்டின் குடிமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களாம். "பெங்கால் பூனைகள் ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானதா?" (Are Bengal Cats legal in Australia?) என்று கூகுளில் தேடினால் முதலில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், அந்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடும்.
"SEO விஷம்" எனப்படும் ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி, கூகுள் தேடல்களை தேடுவதற்கு நிரல்களை பயன்படுத்துகிறார்கள்.. இதில் யாராவது சிக்கும்படி நேர்ந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு: அதாவது, இந்த வாக்கியத்தை சர்ச் செய்ததுமே, கூகுளில் காண்பிக்கப்படும் முதல் லிங்கிற்குள் உங்கள் சாதனம் ஆட்டோமேட்டிக்காக நுழைந்துவிடுகிறது. அப்போது, உங்கள் சாதனத்திலுள்ள உங்களது தனிப்பட்ட தகவல்கள் அதாவது உங்கள் வங்கி கணக்கு, அதன் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ள PIN நம்பர், உங்கள் சாதனத்தில் உள்ள பாஸ்வோர்ட் விபரங்கள் அனைத்தையுமே ஹேக்கர்கள் திருடிவிடுவார்கள். இந்த தனிப்பட்ட தகவல்களை வைத்து, பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் அபாயமும் அதிகமாக நடப்பதால், கூகுள் தளத்தில் மேற்கூறிய வார்த்தைகளை ஒரு போதும் சர்ச் செய்ய வேண்டாம் என்று SOPHOS எச்சரித்துள்ளது.
Readmore: ஆப்பிள் பயனர்களே உஷார்!. தனிப்பட்ட தரவுகளுக்கு ஆபத்து!. மத்திய அரசு எச்சரிக்கை!