முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்!. டீத்தூளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி!. சாலையோர டீக்கடைகளில் அதிர்ச்சி!

Be careful! A cancer-causing pesticide in tea powder! Roadside tea shops shocked!
06:30 AM Jul 15, 2024 IST | Kokila
Advertisement

Cancer: கர்நாடகாவில் சாலையோர கடைகளில் விற்கும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் டீத்தூளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அண்மைக் காலமாக கர்நாடகாவில் சாலையோர உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் உள்ளதாகவும் நுகர்வோருக்கு பலவித உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவற்றின் மாதிரிகளை சேகரித்து கர்நாடக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, கோபி மஞ்சூரியன், பானிபூரி, கபாப், பஞ்சு மிட்டாய், ஷவர்மா உள்ளிட்ட உணவுகளில் நிறத்திற்காக, நச்சுத்தன்மை கொண்ட ரோடமைன்-பி, கார்மோசைன் உள்ளிட்டவை சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வண்ணமூட்டிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயகரமானது என்று கூறி, அவற்றிற்கு கர்நாடக அரசு தடைவிதித்தது.

அதன் தொடர்ச்சியாக டீ அதிகம் குடிக்கப்படும் வட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் சாலையோர டீக்கடைகளில் இருந்து 48 டீத்தூள் மாதிரிகளை கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். பாகல்கோட், பிதார், கடக், தார்வாட், ஹுப்பள்ளி, விஜயநகரா, கொப்பல், பல்லாரி போன்ற மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இந்த டீத்தூள் மாதிரிகளில் அதிகளவில் பூச்சிக்கொல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேயிலை பயிரிடும் போது, அவை செழிப்பாக வளரவும், திடம் மற்றும் சுவைக்காகவும் அதிகளவில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பதப்படுத்தும் போது நச்சுத்தன்மை கொண்ட நிறமூட்டிகள் கலக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த் தேயிலை மூலம் தயாரிக்கப்படும் தேநீர் மூலம், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் தேயிலை தோட்டங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இப்படி சாலையோரம் விற்கப்படும் உணவுகள் மீதான நம்பக்கதன்மை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், தரம் குறைந்த அல்லது அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மக்கள் உட்கொள்ளாமல் இருப்பதே நிரந்தர தீர்வு என கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

Readmore: யூரோ 2024 கோப்பையை வென்றது ஸ்பெயின்!. அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற சாதனை படைத்து அசத்தல்!.

Tags :
cancerInsecticideRoadside tea shopstea powder
Advertisement
Next Article