முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்..!! 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த 5 வயது சிறுமி பலி..!! திருவண்ணாமலையில் அதிர்ச்சி..!!

A 5-year-old girl died foaming at the mouth after drinking 10 rupees Cooldrings.
12:21 PM Aug 11, 2024 IST | Chella
Advertisement

10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ்குமார். இவரது 2-வது மகள் 5 வயதான காவ்யாஸ்ரீ, அங்குள்ள தொடக்க பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று காவ்யாஸ்ரீ, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாய், மூக்கு வழியாக நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக சிறுமி மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் சில உள்ளூர் குளிர்பான வகைகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை குறிப்பிடப்படுவதில்லை என்றும், சுகாதாரமாக செய்யப்படாதவையாக அந்த குளிர்பானங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்கள் குளிர்பானம் வாங்கினால் அதில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை இருக்கிறதா? என்பதை சோதித்து வாங்க வேண்டும். மேலும், அதில் உணவு பாதுகாப்பு துறையின் FSSAI அடையாளம் உள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : ’ஏய் கிட்ட வாடா’..!! வகுப்பறைக்குள் மாணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் மாணவி..!! தீயாய் பரவும் வீடியோ..!!

Tags :
உணவு பாதுகாப்புத்துறைகாவல்துறைகூல்டிரிங்ஸ்சிறுமி பலிதிருவண்ணாமலை
Advertisement
Next Article