முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

துணிந்து நில்!… எதிலும் வெற்றி கொள்!… சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று!… வாழ்க்கை வரலாறு உணர்த்துவது என்ன?

08:23 AM Jan 12, 2024 IST | 1newsnationuser3
Advertisement

சுவாமி விவேகானந்தர் 1863ம் ஆண்டு ஜனவரி12-ம் தேதி கொல்கத்தாவில், விஸ்வநாத் ததா - புவனேசுவரி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திர நாத்தத்தா. இளம் வயதிலேயே இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆனார். அதையடுத்து அவருக்கு விவேகானந்தர் என பெயர் சூட்டப் பட்டது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தன. வரது பிரசிததமான 'விழிமின்.. எழுமின்.. அயராது உழைமின்' என்ற சொற்கள் இளைஞர்களை உத்வேகமடையைச் செய்தன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

Advertisement

மேலும் 1893-ம்ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றது. இவரது பிறந்த நாளை இந்திய அரசு 1984-ம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருப்பவர் விவேகானந்தர் என்றார் மிகையாகாது. இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும் என்றவர்.

1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறியவர் விவேகானந்தர். இந்திய தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கிய நபராக விளங்கினார். நம்முன் இருக்கும் கடமைகளைச் செய்வதுதான், உயர்வு பெறுவதற்கு ஒரே வழி. நம் கடமை களைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்து விடலாம். சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் வீறுநடை போடுவோம்.

Tags :
சுவாமி விவேகானந்தர்தேசிய இளைஞர் தினம்பிறந்த தினம் இன்று
Advertisement
Next Article