மக்களே உஷார்..!! இதை உண்மையென நம்பிடாதீங்க..!! ரொம்ப டேஞ்சர்..!! எச்சரிக்கும் ஆணையம்..!!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான மோசடியில் ஈடுபடுபவர்கள், முன்பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துகின்றனர். போன் செய்பவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்பதாகவும் இல்லையென்றால், செல்போன் எண்களை தடை செய்வதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.
நாங்கள் (TRAI) எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்புகள் மூலமாகவோ வாடிக்கையாளர்களின் எண்களைத் துண்டிப்பது பற்றி ஒருபோதும் தொடர்பு கொள்ள மாட்டோம் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. உங்களுக்கு அத்தகைய அழைப்பு வந்தால், அது ஒரு மோசடி அழைப்பாக இருக்கலாம். நீங்கள் அதை உண்மையென எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இத்தகைய மோசடி அழைப்புகள் வந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பீதியடைய வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட அழைப்பு மையங்கள் அல்லது உங்கள் டெலிகாம் வழங்குநரின் வாடிக்கையாளர் ஆதரவை (customer care) தொடர்பு கொண்டு மோசடி அழைப்புகள் குறித்து விசாரித்துக் கொள்ள வேண்டும். இந்தச் சிக்கலைச் சமாளிக்க sanchar saathi பிளாட்ஃபார்மில் உள்ள சேவை மூலம் சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகளைப் புகார் அளிக்கலாம்.
Read More : வாழை, கொட்டுக்காளி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இத்தனை கோடியா..?