For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPL 2024 | கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகம் செய்யும் பிசிசிஐ.!! இதன் சிறப்பம்சங்கள்.!!

08:25 PM Mar 19, 2024 IST | Mohisha
ipl 2024   கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக  ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்  அறிமுகம் செய்யும் பிசிசிஐ    இதன் சிறப்பம்சங்கள்
Advertisement

உலக கிரிக்கெட்டின் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. உலக டி20 லீக் போட்டிகளில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது தொடர் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டி அட்டவணைகள் மற்றும் வெளியிடப்பட்டிருக்கின்றன. மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணையை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிட்டது. தற்போது பொது தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான இரண்டாவது அட்டவணை வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடுவர்களின் முடிவு எடுக்கும் செயல்முறைகளின் துல்லியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியாக, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரவிருக்கும் சீசனில் ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த புதுமையான அமைப்பு தொலைக்காட்சி நடுவர்கள் மற்றும் ஹாக்-ஐ ஆபரேட்டர்களின் பங்கில் புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது என தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் தடையற்ற ஒருங்கிணைப்பின் மூலம் ஆன்-பீல்டு தீர்ப்பில் 100% உறுதியளிக்கும் எனவும் தெரிவிக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்தின் மூலம் டிவி நடுவர் அவருடன் இருக்கும் இரண்டு ஹாக்-ஐ ஆபரேட்டர்களிடமிருந்து வீடியோ தகவல்களை பெறுவார். இந்த ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டத்திற்காக மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளில் 8 அதிவேக கேமராக்கள் நெட்வொர்க்குடன் நிறுவப்பட்டிருக்கும். இதன் மூலம் எந்தவித தடையும் இல்லாமல் டிவி நடுவர் முடிவு எடுக்க முடியும். மேலும் இந்த புதிய சிஸ்டத்தின் மூலம் டிவி ஒளிபரப்பு இயக்குனரை சார்ந்து இருக்க வேண்டிய தேவையும் இல்லை.

மேலும் இந்த புதிய முறை ஸ்பிளிட்-ஸ்கிரீன் காட்சிகளுக்கான உள்ளீடுகளையும் வழங்குகிறது. இது பவுண்டரி லைன அருகே பிடிக்கப்படும் கேட்சுகள் அல்லது ரன் அவுட் ஏற்படும் சூழ்நிலைகளில் மூன்றாவது நடுவர் துல்லியமான முடிவை எடுப்பதற்கு உதவுகிறது. உதாரணமாக பந்து எல்லைக்கோடு அருகே கேட்ச் செய்யப்படும் போது அது தொடர்பான விரிவான காட்சிகளை வழங்குகிறது. இதன் மூலம் நடுவர்கள் துல்லியமாக முடிவெடுப்பதற்கு உதவுகிறது.

மேலும், ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் ட்ரை-விஷன் காட்சிகளை வழங்குவதன் மூலம் ஸ்டம்பிங் மற்றும் எல்பிடபிள்யூ தொடர்பான மேல்முறையீடுகளில் புரட்சியை ஏற்படுத்துகிறது, சைட்-ஆன் மற்றும் ஃப்ரண்ட்-ஆன் கோணங்களை ஒரே பிரேமில் ஒருங்கிணைக்கிறது. முந்தைய முறைகளுடன் ஒப்பிடும் போது, ​​கணிசமான அளவு அதிக பிரேம் ரேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஸ்டம்பிங் மற்றும் எல்பி டபிள்யூ டிஸ்மிஸ்களை தீர்ப்பதற்கு நடுவர்களுக்கு இணையற்ற தெளிவை வழங்குகிறது.

மேலும் இந்த புதிய சிஸ்டம் வேகத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் அதேநேரம் துல்லியமான தகவல்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்பிடபிள்யூ மேல்முறையீடுகளில் அவுட் சைடு லெக் ஸ்டெம்பிள் வீசப்படும் பந்துகளை துல்லியமாக கணித்து தேவையில்லாமல் ஏற்படும் நீரை விரயத்தை குறைக்கிறது. மேலும் துல்லியமாக முடிவெடுப்பதற்கும் வழி வகுக்கிறது.

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்தை செயல்படுத்துவது, விளையாட்டின் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஐபிஎல்லின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்ச்சைகளைக் குறைப்பதற்கும், பார்வை அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய முறை வழிவகிக்கிறது. மேலும் இது ஐபிஎல் 2024 இல் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்மார்ட் ரிப்ளை தொடர்பான ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 15 நடுவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய சிஸ்டத்தின் அறிமுகம் மூலம் ஐபிஎல் 2024 இல் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதற்கு பிசிசிஐ தயாராக உள்ளது.

Read More: இடைப்பட்ட உண்ணாவிரதம் இதய நோய் மரணத்துடன் தொடர்புடையதா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Advertisement