முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BB Archana | காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..!! திருமணம் எப்போது..? வைரல் புகைப்படம்..!!

01:40 PM May 21, 2024 IST | Chella
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் வின்னரான அர்ச்சனா, தனது காதலன் அருண் பிரசாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

BB Archana | தொகுப்பாளினியாக மீடியாவில் அறிமுகமான அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். ராஜா ராணி சீரியல் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அர்ச்சனா, சீரியல்களில் நடிப்பதை நிறுத்தினார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, முதல் வாரம் அழுமூஞ்சி என பெயரெடுத்தாலும், அடுத்த வாரம் முதல் தன்னை அழ வைத்தவர்களை தனி ஆளாக இருந்து விரட்டியடித்தார். அந்த எபிசோடால் அர்ச்சனாவுக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகத் தொடங்கியது.

அந்நிகழ்ச்சியில் பல்வேறு தடைகளை தாண்டி பைனல் வரை சென்ற அர்ச்சனா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டைட்டில் ஜெயித்த அர்ச்சனா, காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அவரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்தும் காதலிப்பதாக ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தன. இதுவரை ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது ஜோடியாக ஒரு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அர்ச்சனா - அருண் பிரசாத் ஜோடியின் சமீபத்திய புகைப்படங்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Read More : தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் 11 பேர் பலி..!! கனமழையால் நிகழ்ந்த சோகம்..!! மக்களே உஷார்..!!

Advertisement
Next Article