முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட  அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை.‌.!

05:30 AM May 18, 2024 IST | Vignesh
Advertisement

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை.

Advertisement

தென் தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் நேற்று (மே 17) காலை முதல் பலத்த மழை பெய்தது. அந்த வகையில், தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

மிதமான மழை பெய்வதால் பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் சரியாக 2 மணி அளவில் கனமழை பெய்த நிலையில், மலையிலிருந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடத் தொடங்கினர். வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.

தென்காசி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளிலும் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Next Article