For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்..!! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

The death of a basketball player from Coimbatore, who returned from Madhya Pradesh to play a basketball tournament, has come as a shock.
02:42 PM Nov 18, 2024 IST | Chella
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்     போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Advertisement

மத்தியப்பிரதேசத்திற்கு கூடைப்பந்து போட்டி விளையாட சென்று விட்டு திரும்பிய, கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த எலினா லாரேட் சக பள்ளி மாணவிகளுடன் பங்கேற்றுள்ளார். போட்டி முடிந்து கடந்த 15ஆம் தேதி ரயில் மூலம் தமிழ்நாடு புறப்பட்டுள்ளார். இந்நிலையில், ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி எலினா, உடல்நல பிரச்சனை குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே எலினா உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் வரும் போது மாணவி பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு, எலினாவுக்கு வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகளால் அவதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மாணவியின் மரணத்திற்கு பீட்சா, பர்கர் தான் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More : இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Tags :
Advertisement