அடிப்படை ஊதியம் உயர போகிறது... மத்திய அரசு பணியாளர்களுக்கு விரைவில் ஜாக்பாட்...!
2004ல், 5வது ஊதிய கமிஷன் அமலில் இருந்தபோது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியபோது, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அத்தகைய பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அக நிவாரணப்படி உயர்வுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட சில சலுகைகள் தானாகவே 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டின்மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ என்று அழைக்கப்படும் அகவிலைப்படி உயர்வு 4% அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் புதிய அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மத்திய அரசிடம் இருந்து அகவிலைப்படி, அக நிவாரணப்படி, அடிப்படை ஊதிய இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம், இபிஎப்ஓ, ஓய்வூதியம் மற்றும் இறப்புக்கான பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதாவது 25 சதவீதமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது அரசு.
அகவிலைப்படி உயர்வால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். டிஏ 50 சதவீதத்தை எட்டியுள்ளதால், இந்தத் தொகையை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து பூஜ்ஜியத்தில் இருந்து கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 2004ல், 5வது ஊதிய கமிஷன் அமலில் இருந்தபோது, டிஏ 50 சதவீதத்தை எட்டியபோது, அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அத்தகைய பரிந்துரைகள் எதுவும் வரவில்லை. ஜூலை 2024 முதல் புதிய அரசாங்கம் அடைந்தவுடன் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.