முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கஃபேவில் பர்தே பார்ட்டி..!! உணவருந்திவிட்டு ஓட்டம் பிடித்த இளம்பெண்..!! டிண்டர் ஆப்பால் சிக்கித் தவித்த இளைஞர்..!! நடந்தது என்ன..?

A young man met a girl through Tinder app and went to a cafe to meet her in person, but he was robbed of Rs. 1,21,000.
06:28 PM Jul 01, 2024 IST | Chella
Advertisement

டிண்டர் ஆப் மூலம் இளைஞர் ஒருவர் பெண்ணிடம் பழகி அவரை நேரில் சந்திப்பதற்காக கஃபேவிற்கு சென்ற நிலையில், அவரிடம் ரூ.1,21,000 பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டெல்லியில் இளைஞர் ஒருவர் டிண்டர் (Tinder) ஆப் மூலம் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். அப்போது, ப்ளாக் மிரர் கஃபேவில் வர்ஷாவின் பிறந்தநாளை கொண்டாட அந்த இளைஞர் முடிவு செய்திருக்கிறார். பின்னர், அந்த கஃபேவில் இருவரும் சாப்பிடுவதற்கு தேவையானவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது திடீரென்று அந்தப் பெண் தனது வீட்டில் பிரச்சனை என்று கூறி உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

பின்னர், அந்த இளைஞர் ஆர்டர் செய்தவற்றிற்கு பணம் செலுத்தலாம் என்று பில்லை எடுத்து பார்த்துள்ளார். அதில் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்துள்ளது. இதனை பார்த்தவுடன் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கஃபே உரிமையாளர் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார். பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர் பணத்தை கட்டி விட்டு உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று, அங்கு நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த கஃபேவின் உரிமையாளர்களும், அந்தப் பெண் வர்ஷாவும் கூட்டு களவாணி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஷாதி டாட் காம் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட்டிங்கில் இருந்த அந்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இது போன்ற செயலிகளை உபயோகிப்போர் கவனமாக இருக்கும்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Read More : BREAKING | சொந்த கட்சி கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்..!! மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன்..?

Tags :
இளம்பெண்உணவகம்டிண்டர் செயலிடேட்டிங்திருமணம்பண மோசடி
Advertisement
Next Article