பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 1267 பணியிடங்கள்! கை நிறைய சம்பளம்.. விட்றாதீங்க..!!
பேங்க் ஆஃப் பரோடா சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.
காலிப்பணியிடங்கள்: காலியாக 1267 மேலாளர் நிலை பதவிகள் நிரப்படப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள் விவரங்கள்:
கிராமபுற மற்றும் விவசாய வங்கி பிரிவு - 200 இடங்கள்
சில்லறை விற்பனை பொறுப்புகள்: 450 இடங்கள்
எம்எஸ்எம்இ வங்கி: 341 இடங்கள்
தகவல் பாதுகாப்பு: 9 இடங்கள்
வசதி மேலாண்மை - 22 இடங்கள்
கார்ப்பரேட் மற்றும் நிறுவன கடன்: 30 பதவிகள்
நிதி மேலாண்மை - 13 இடங்கள்
தகவல் தொழில்நுட்பம்: 177 இடங்கள்
நிறுவன தரவு மேலாண்மை அலுவலகம்: 25 இடங்கள்
வயது வரம்பு: பணிகளைப் பொறுத்து வயதுவரம்பு மாறுபடும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
கல்வி தகுதி: B.E/B.Tech, Any Degree, B.Sc, BCA, MCA, M.Sc, MBA, CA/CFA/CMA
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://www.bankofbaroda.in/career ஆகும்.
Read more ; பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..? – வெளியான பரபரப்பு தகவல்