For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தெலுங்கானா: 15 நிறுவனங்களில் நூதன வங்கி மோசடி.! பல கோடி ரூபாய் கொள்ளை அம்பலம்.!

12:12 PM Feb 22, 2024 IST | 1newsnationuser4
தெலுங்கானா  15 நிறுவனங்களில் நூதன வங்கி மோசடி   பல கோடி ரூபாய் கொள்ளை அம்பலம்
Advertisement

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஆந்திரா வங்கியில், 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தனது கடனை புதுப்பிக்க முயன்ற போது, அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட 12 காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மாவட்டத்திலிருந்து சுமார் 63 கிலோ மீட்டர் தொலைவில் சங்கரெட்டி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கியில், 2018ஆம் ஆண்டு, 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்கள் அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தற்போது அந்த கடனைப் புதுப்பிக்க முயன்றுள்ளார். கடனை புதுப்பிக்க வங்கி நிர்வாகம் அவரது ஆவணங்களை சரி பார்த்தபோது, பல முரண்பாடுகள் வெளிப்பட்டன.

2021ஆம் ஆண்டு வங்கியின் சார்பில், மோசடி செய்த அந்த நபர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் பெற்ற கடனுக்கு பணத்தை சரிவர செலுத்தாததும் தெரியவந்தது. சட்ட அமலாக்க அதிகாரிகள் துரிதமாக விசாரணையை மேற்கொண்டு, மோசடி செய்தவர்களுக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்தனர்.

விடாமுயற்சியுடன் செயல்பட்ட ஆர்சி புரம் காவல் நிலைய அதிகாரிகள், குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சேகரித்து, தற்போது 12 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

English summary: 12 people were arrested in Telangana for involving in bank loan forgery by providing fake documents.

Read More: “நடிகர் Vijay-க்கு ஆலோசகராக இருக்க மாட்டேன்” – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு.!

Tags :
Advertisement