For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bank: வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்!… இன்று டிஜிட்டல் சேவைகள் கிடைக்காது!

05:52 AM Mar 23, 2024 IST | 1newsnationuser3
bank  வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட் … இன்று டிஜிட்டல் சேவைகள் கிடைக்காது
Advertisement

Bank : பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த முடியாது என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக எஸ்பிஐ (SBI) வெளியிட்டுள்ள தகவலின்டி, இன்டர்நெட் பேங்கிங், யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் மற்றும் மொபைல் ஆப் (Yono Business Web & Mobile App), யோனோ மற்றும் யுபிஐ ஆகியவற்றின் சேவைகள் செயல்படாது எனக் கூறப்பட்டு உள்ளது. இன்று மதியம் 01:10 மணி முதல் பிற்பகல் 02:10 மணி வரை எஸ்பிஐ வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் மற்றும் மொபைல் ஆப், யோனோ மற்றும் யுபிஐ சேவைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.

இந்த காலகட்டத்தில், யூபிஐ லைட் (UPI LITE) மற்றும் ஏடிஎம் (SBI ATM) சேவைகள் தொடர்ந்து செயல்படும். அதை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். UPI LITE லைட் என்றால் என்ன? யூபிஐ லைட் என்பது ஒரு புதிய கட்டண தீர்வாகும். இது குறைந்த தொகை பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக NPCI உருவாக்கிய ஒரு காமன் லைப்ரரி (CL) பயன்பாட்டை உபயோகிக்கின்றது. இதற்கு ஒரு வரம்பும் விதிக்கப்பட்டுள்ளது.

UPI லைட்டை எவ்வாறு இயக்குவது? முதலில் வாடிக்கையாளர்கள் தங்கள் UPI செயலியை திறக்க வேண்டும். UPI செயலின் முகப்புத் திரையில், UPI LITE ஐ இயக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். UPI LITE ஐ எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பின்னர் அதை அக்செப்ட் செய்ய வேண்டும். UPI LITE இல் சேர்க்க நினைக்கும் தொகையை உள்ளிட்டு, வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு UPI பின்னை உள்ளிடவும். அதன் பிறகு, UPI LITE வெற்றிகரமாக இயக்கப்பட்டுவிடும்.

UPI LIte மூலம் எவ்வாறு பண பரிவர்த்தனை செய்வது? முதலில் UPI செயலியை திறக்கவும். பின்னர் பணம் செலுத்த ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன்பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ அந்தத்தொகையை உள்ளிடவும். இறுதியாக UPI பின் நம்பர் இல்லாமல் பணம் வெற்றிகரமாக அனுப்பப்படும்.

Readmore: Biggest donors: தேர்தல் பத்திரங்கள்!… எந்த கட்சிக்கு யார் அதிகம் கொடுத்தார்கள்?… முழு விவரங்கள்!

Tags :
Advertisement