வங்கதேச வன்முறை!. இதுவரை 650 பேர் பலி!. ஐநா தகவல்!.
Bangladesh violence: வங்கதேச வன்முறையில் இதுவரை 650 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால், தனது பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து, வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக வங்கதேசத்தில் சமீபத்திய எதிர்ப்புகள் மற்றும் அமைதியின்மை என்ற தலைப்பில் 10 பக்கம் கொண்ட முதல் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று முன்தினம் ஜெனீவாவில் வெளியிட்டது. இதில், வங்கதேசத்தில் ஜூலை மாதம் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சுமார் 400பேர் பலியாகி உள்ளனர்.
ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிக்கு இடையில் புதிய எதிர்ப்பு அலைகள் உருவானதை அடுத்து 250 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடந்த தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு காவல்கள் பற்றிய அறிக்கைகள் மீது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தி உள்ளது.
Readmore: உயர்கல்வி நிறுவனங்களில் வரும் 26 முதல் 31-ம் தேதி வரை விளையாட்டு போட்டி…! UGC முக்கிய உத்தரவு…!