வங்கதேச வன்முறை!. இதுவரை 4,500 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்!. வெளியுறவுத்துறை!
Bangladesh violence: வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறையால் சிக்கி தவித்த இந்திய மாணவர்களில் இதுவரை 4,500 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வேலைகளில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து இதுவரை 100-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். டாக்கா, சிட்டகாங் போன்ற வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் இந்த வன்முறை மிகத்தீவிரமான முறையில் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களில் இதுவரை 4,500 மாணவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையில் நேபாளத்தைச் சேர்ந்த 500 மாணவர்களும், பூட்டானின் 38 மாணவர்களும், மாலத்தீவு மாணவர்களும் இந்தியா வந்துள்ளனர். மேலும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், நெருக்கடி காலங்களில் வெளிநாடுகளில் இருக்கும் குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் MEA உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
Readmore: அதிகாலையில் பயங்கரம்!. தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. ஜம்முவில் ராணுவ படை குவிப்பு!