வங்கதேச வன்முறை!. 30 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை!. ஹசீனா வெளியேறிய பிறகு நடந்த சம்பவம்!
Bangladesh violence: ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு, 30 பேரை போலீசார் சுட்டுக்கொன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு என பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜனவரி மாதம் 4-வது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா. 5 மாதங்கள் கடந்த பின்னர், குடிமைப் பணிகளில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்க டாக்கா நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைதி போராட்டத்தை அறிவித்தனர். மாணவர் போராட்டத்திற்கு ஷேக் ஹசீனா அனுமதி வழங்காத நிலையிலும், நாடு முழுவதும் போராட்டம் வேகமெடுத்தது. போராட்டத்தை ஒடுக்க நினைத்த காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது.
தங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால், மாணவர்கள் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்களை அழைத்துப் பேசாமல், அவர்களை பயங்கரவாதிகள் என அழைத்தார் ஷேக் ஹசீனா. மேலும் பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்தார். நாடு முழுவதும் வன்முறையும் கலவரமும் தீவிரமடைய, டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது காவல்துறை.
இதில், போராட்டத்தை முன்னெடுத்த 6 மாணவர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் காலவரம்பின்றி மூடப்பட்டன. கொல்லப்பட்ட மாணவர்கள் நினைவாக அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய பேரணியிலும் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
அதிகரிக்கும் வன்முறையை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிக்காத மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். அரசு உத்தரவை மீறியதால் இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் காவல்துறையினர் என 90 பேர் உயிரிழந்தனர். டாக்காவை நோக்கி மாணவர்கள் பேரணியாக வரத் தொடங்கினர். போராட்டம் தீவிரமடைந்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, கடந்த 6ம் தேதி செவ்வாயன்று நடந்த சம்பவத்தில் 30 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆதாரங்களின்படி, டாக்காவின் ஜத்ராபரியில் உள்ள பிணவறையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குறைந்தது 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
Readmore: அடேங்கப்பா!. ஒரே நாளில் 8 பதக்கம்!. 100ஐ நெருங்கிய அமெரிக்கா!. சீனாவை பின்னுக்கு தள்ளி அசத்தல்!