ஹெலிகாப்டரில் தப்பியோடிய வங்கதேச பிரதமர்..!! இந்தியாவில் தஞ்சம்..!! எந்த மாநிலத்தில் தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டை விட்டு தமது சகோதரி ரெஹானாவுடன் ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர், இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்கள் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்தை ஷேக் ஹசீனா அரசால் முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் ராணுவம் களமிறங்கியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால், அவர் தமது பதவியில் இருந்து விலகினார்.
மேலும், போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் டாக்கா இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடினார். இதனால் வேறு வழியின்றி, உயிருக்கு பயந்து வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்றார். வங்கதேசத்தை விட்டு தப்பிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் வங்கதேசத்தை உருவாக்கினார். வங்கதேச விடுதலைக்கு காரணமான தேசத் தந்தை என அவர் போற்றப்பட்டார். ஆனால், வங்கதேசம் விடுதலையான சில ஆண்டுகளிலேயே முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ஷேக் ஹசீனாவும், சகோதரி ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்தனர். இதனால், அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். தற்போது ஷேக் ஹசீனாவும், ரெஹானாவும் சொந்த நாட்டு மக்களின் புரட்சியால் நாட்டை விட்டே தப்பி ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Read More : நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர்..!! அமலுக்கு வந்தது ராணுவ ஆட்சி..!! வங்கதேசத்தில் பெரும் பரபரப்பு..!!