முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 45 பேருக்கு கைது வாரண்ட்..!!

Bangladesh ICT issues arrest warrants against Sheikh Hasina, 45 others for 'crimes against humanity'
03:29 PM Oct 17, 2024 IST | Mari Thangam
Advertisement

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் தலைவர்கள் 45 பேருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், நவ.18இல் ஷேக் ஹசீனாவை நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

Advertisement

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT) தலைவர் நீதிபதி கோலம் மோர்துசா மஜும்தார் அக்டோபர் 17, வியாழன் அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் கோரி இரண்டு மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமை வழக்கறிஞர் முஹம்மது தாஜுல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்து நவம்பர் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடந்த கலவரம், கொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களின் தலைமையில் ஷேக் ஹசீனா இருந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஒபைதுல் குவாடர், அசாதுஸ்ஸாமான் கான் கமால், ஹசன் மஹ்மூத் மற்றும் அனிசுல் ஹக் உள்ளிட்ட 45 தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனித நேயம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் மீது 60க்கும் மேற்பட்ட குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

Read more ; சார்ஜ் போடும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! இதனாலதான் ஃபோன் சார்ஜ் சீக்கிரம் குறையுது..!!

Tags :
arrest warrantsbangladeshcrimes against humanitySheikh Hasina
Advertisement
Next Article