For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வன்முறை தேசமாக மாறிய வங்கதேசம்!. 100-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!. நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிப்பு!

Bangladesh protests LIVE updates: India issues advisory as nearly 100 killed
07:05 AM Aug 05, 2024 IST | Kokila
வன்முறை தேசமாக மாறிய வங்கதேசம்   100 ஐ தாண்டியது பலி எண்ணிக்கை   நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிப்பு
Advertisement

Bangladesh violent: மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100-ஐ தாண்டியுள்ளதால் வங்கதேசம் முழுவதும் வன்முறை தேசமாக காட்சியளிக்கிறது.

Advertisement

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Readmore: எச்சரிக்கை!. நிபா வைரஸால் 14வயது சிறுவன் பலி!. வௌவால்களில் இருந்து வைரஸ் பரவியது உறுதி!

Tags :
Advertisement