முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு!! என்ன காரணம்?

Bangalore police registered a case against the pub owned by Virat Kohli!! what is the reason?
11:47 AM Jul 09, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி, களத்தில் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, வெற்றிகரமான தொழிலதிபரும் கூட. விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யூன் பப் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. தற்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. போலீசார் எதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

Advertisement

என்ன காரணம்: அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகப் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டன என்பதே புகாராகும்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதன்படி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உள்ள ஒன்8 கம்யூன் பப், விதிகளை மீறி அதிக நேரம் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலி: விராட் கோலியின் One8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது. இது கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்கப்பட்டது. இது எம்ஜி சாலையில் உள்ள ரத்னம் காம்பிளக்ஸில் ஆறாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இதன் மீதே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Tags :
Bangalore policefirpubvirat kohli
Advertisement
Next Article