முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேங்கைவயல்..!! அசுத்தம் செய்த விவகாரத்தில் அறிக்கைகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்க முடியாது..!! ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!

Why not even a single criminal has been arrested in the Vengai field case even after 2 years..? Madras High Court has questioned.
02:04 PM Jul 08, 2024 IST | Chella
Advertisement

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ராஜ்கமல் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 'புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், '2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யாதது ஏன்..? மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. 2 வாரங்களில் தீர்க்கமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

Read More : 5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்..!! 2026இல் அவர் தான் முதல்வர்..!! சூளுரைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

Tags :
குற்றவாளிகள்சென்னை உயர்நீதிமன்றம்புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயல் சம்பவம்
Advertisement
Next Article