முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சண்டாளர்" என்கிற பெயரை பயன்படுத்த தடை..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

The use of the name 'Sandala' is prohibited.
07:14 PM Jul 15, 2024 IST | Chella
Advertisement

கருணாநிதி குறித்த அதிமுக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ! சதிகாரன் கருணாநிதி ! சண்டாளன் கருணாநிதி ! என்ற பாடல் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை தொடர்ந்து, அது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில், சட்டாளன் என்பது ஒரு சாதிய சொல் என்று கூறப்படுகிறது. சண்டாளர்கள் எனப்படும் ஒரு தரப்பினர் பாரம்பரியமாக தீண்டத்தகாதவராக கருதப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், சண்டாளன் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் பேசும் வழக்குச் சொல்லாகவே இருந்து வருகிறது. நூறாண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்திலும் (கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.) அந்த வார்த்தை இடம்பெறுகிறது. அதை யாரும் தீண்டத்தகாத வார்த்தையாக கருதாமல் வழக்குச் சொல்லாகவே கருதி வருகின்றனர். பொதுவாக, கொடுமைக்காரர்களை பார்த்து கூறும் வார்த்தையாகவே அது இருந்து வருகிறது.

ஆனால், தற்போது சண்டாளன் என்ற வார்த்தையை கொண்டு அரசியல் சதுரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த வார்த்தையை உபயோகித்ததாக கூறித்தான் சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையினர் எஸ்சி/எஸ்டி வழக்கை பதிவு செய்து கைது செய்தது.

இந்நிலையில், "சண்டாளர்" என்கிற பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் #'சண்டாளர்' என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது மீறினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும்போது இதை எடுத்துச் செல்ல மறந்துறாதீங்க..!! என்ன தெரியுமா..?

Tags :
சண்டாளர்தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்
Advertisement
Next Article