For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Poll: ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை கருத்து கணிப்பு வெளியிட தடை...! தேர்தல் ஆணையம் உத்தரவு...!

05:55 AM Apr 04, 2024 IST | Vignesh
poll  ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை கருத்து கணிப்பு வெளியிட தடை     தேர்தல் ஆணையம் உத்தரவு
Advertisement

ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisement

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) எந்தவொரு நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement