”படத்திற்காக விஷாலின் கண்களை தைத்த பாலா”..!! ”சும்மா விட மாட்டோம்; கேஸ் போட போறோம்”..!! கொந்தளித்த நண்பர்
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா படம் வரும் 12ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. இயக்குநர் சுந்தர் சி இயக்கிய இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஷால் உடல் எடை மெலிந்து இருந்ததோடு கை நடுக்கத்துடன் பேசினார். இதையடுத்து, அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியும் பரவியது. விஷாலின் உடல்நிலை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், விஷாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது குறித்து ஆர்யா பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது.
இப்போது அவரது நண்பரும் தயாரிப்பாளருமான ராஜா அளித்துள்ள பேட்டியில், ”விஷாலை இப்படி பார்க்கும் போது அழுகை வருகிறது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் விஷால். இன்று அவர் இப்படி இருக்க பாலா தான் காரணம். அதுவும் அவன் இவன் படத்தில் அவருக்கு ஒன்றரை கண்ணை தைத்ததால் வந்த தலைவலி பிரச்சனை தான் காரணம். அவர் தலைவலியில் துடித்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
முதலில் விஷாலின் ரசிகன் நான். பிறகு தான் நண்பர். விஷாலிடம் பேச முயற்சித்தும் பேச முடியாமல் போய்விட்டது. ஏனென்றால், அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக தான் அவர் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து வந்தார். விஷாலின் இந்த பிரச்சனை குறித்து மருத்துவர்களிடம் பேச இருக்கிறோம். பிரச்சனையை தெரிந்து கொண்டு எங்கிருந்து ஆரம்பித்ததோ அதற்குரியவர்கள் மீது வழக்கு தொடர உள்ளோம். பாலா படத்தில் நடிக்க வேண்டாமென்று விஷாலிடம் நான் சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை.
இந்த படத்துக்காக விஷாலின் கண்கள் இழுத்து தைக்கப்பட்டது. அவன் இவன் படத்திற்காக விஷால் எந்தளவிற்கு கஷ்டப்பட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் குறியாக இருப்பார். அப்படி இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதாக சொல்வதை ஏற்க முடியாது” என்று கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.