ஆச்சரியங்கள் பல நிறைந்த பால தண்டாயுதபாணி திருக்கோயில்.. இப்படி ஒரு வரலாறு இருக்கா..?
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் முருகப்பெருமான். தமிழ் நாட்ட்ல் மட்டும் அற நூறுக்கும் மேற்பட்ட கோயில்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிரார் முருகபெருமான். இதில் அறுபடை வீடுகளும் சேரும். தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறு கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று தான் பால தண்டாயுதபாணி திருக்கோயில். கோவை மாவட்டத்தில் குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு : 350 படிகளை கொண்ட இக்கோயில் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய கரடு முரடான காட்டுப்பாதை வழியிலும் செல்லலாம். மற்றொன்று சமீபத்தில் அமைக்கப்பட்ட படிகள் மூலமாகவும் மலையின் மீது ஏறிச்சென்று முருகனை தரிசிக்கலாம். வற்றாத கிணறு ஒன்று இந்த குன்றின் அருகில் காணப்படுகிறது.
அந்த கிணறில் இருந்து தான் நீர் எடுத்து விசேஷ நாட்களில் சாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கிணற்று நீரை தீர்த்தமாகவும் தருகின்றனர். இதன் மூலம் நோய்கள் தீரும் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இந்த குன்றிலிருந்து 100 மீட்டர் தூரம் கீழே இறங்கி வந்தால் ஆதி மனிதர்களின் குகைகளை காணலாம்.
மேலும் இந்தக் கோயில்களில் ஆதி மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் என்பதும், அவர்கள் வரைந்த ஓவியத்தையும் பார்த்து மெய்சிலிர்க்கிறது. வெள்ளை நிறத்தில் பாறையின் மேல் வரைந்துள்ள ஓவியத்தில் யானையை கட்டுப்படுத்துவது போலவும், யானையின் மேல் உட்கார்ந்து சவாரி செய்வது போலவும் வரைந்து உள்ளனர். யானைக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவும், யானை சந்தை இடமாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
வரலாறு : பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர்.
காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக ஆனது. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் எல்க் குன்று இருந்த இடம் இப்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் #குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
Read more ; வீட்டில் தனியாக இருந்த சித்தி; உள்ளே சென்ற மகன்.. அலறல் சத்தத்தால் அதிர்ந்த அக்கம்பக்கத்தினர்..