"என்னோட பொண்ணு பண்ண இந்த காரியத்த என்னால ஜீரணிக்க முடியல"; பாக்கியாஜ் பகிர்ந்த தகவல்..
திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லா தாலந்தும் உள்ளவர் தான் பாக்யராஜ். 'சுவரில்லா சித்திரங்கள்' என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர். மேலும், அடுத்தடுத்து இவர் இயக்கி நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்கியராஜ், தன்து மகளின் காதலை ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ஆம், 1981 ஆம் ஆண்டு, தனக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரவீனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்தார்.
பிரவீனா மீது பாக்கியராஜ் வைத்திருந்த காதலை பார்த்து, பூர்ணிமா ஜெயராம் பாக்கியராஜை காதலித்தார். பாக்கியராஜ் ஆரம்பத்தில் பூர்ணிமா காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் குடும்பத்தினர் மற்றும் பூர்ணிமாவின் பிடிவாதம் காரணமாக காதலுக்கு சம்மதித்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையான ஜோடியாக வலம் வரும் பூர்ணிமா மற்றும் பாக்யராஜ் ஜோடிக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர். இவரது மகன் சாந்தனு பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரது மகள் சரண்யா, 'பாரிஜாதம்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார்.
பின்னர், அவர் எதிர்பார்த்த கதாபாத்திரம் அமையாததால், அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. அதனால் அவர் தனது அப்பாவுடன் சினிமா சம்மந்தமான மற்ற வேலைகளை பார்த்து வந்தார். இந்நிலையில், தற்போது அவரது அம்மா துவங்கிய பேஷன் டிசைனிங் நிறுவனத்தை கவனித்து வருகிறார். மேலும் இதுவரை தன்னுடைய கணவர் யார் என்பதை வெளிப்படுத்தாத சரண்யா, திடீரென தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பல கேள்விகள் சமூக வலைதளத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாக்கியராஜ் தற்போது பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.. " என் பெண்ணோட காதல என்னால ஜீரணிக்க முடியல. அவ தனியாக போனது நால நாங்களும் கோபத்தில இருந்தோம். ஆனால் அவர் கர்ப்பம் ஆகிட்டான்னு சொன்னதும், மனசு தாங்க முடியல. அதுனால பூர்ணிமா கூட போனாங்க. பையன் பிறந்தது தெரிஞ்சதும், நான் ஓடிப் போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். நான் தான் கையில முதல்ல பேரன வாங்குனேன். ஆனா இப்போ என்னால அவன பாக்காம இருக்க முடியல. அவனாலையும் நான் இல்லாம இருக்க முடியாது" என கூறியுள்ளார்.
Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..