Bajaj Pulsar NS400Z Review ; புயல் வேகம்.. வெறித்தனமான ஸ்டைல்.. 1.85 லட்சத்தில் பல்சர் NS400Z! அப்டி என்ன ஸ்பெஷல்..
பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் NS400Z மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய 2024 பல்சர் NS400Z மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய பல்சர் மாடலாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 2024 பஜாஜ் பல்சர் NS400Z இன் விலை 1.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் பல்சர் NS200 க்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் NS200 மாடலின் பீஃபியர் வெர்ஷனைப் போலவே தோற்றமளிக்கிறது. இருப்பினும் சற்று வித்தியாசமான ஸ்டைலிங் கூறுகள் மற்றும் நிறுவனத்தின் வரம்பில் புதிய முதன்மையான பல்சர் இதுவாகும்.
பல்சர் NS400Z-இன் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்:
பல்சர் என்எஸ், இந்த பெயரில் கிடைக்கும் பல்சர் பைக்குகள் அனைத்தும் ஸ்ட்ரீஃபைட்டர் தோற்றம் கொண்டவையாக இருக்கின்றன. இதேபோல், புதிய என்எஸ்400இசட் மாடலும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் தோற்றத்தையேக் கொண்டுள்ளது. குறிப்பாக, என்எஸ்200 மாடலின் டிசைன் தாத்பரியங்கள், சிறப்பம்சங்கள் பலவற்றை இந்த பைக் மாடல் பெற்றிருக்கின்றது.
அதேவேளையில், கூடுதல் கட்டுமஸ்தான தோற்றத்தை புதிய என்எஸ்400இசட் பெற்றிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்த என்எஸ் 200 மாடலைப் போன்றே என்எஸ் 400 இசட் மாடல் இருக்கின்றது. இந்த தோற்றமே என்எஸ் 400 இசட் அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பதையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த தோற்றத்திற்கு இன்னும் அதிகம் பலம் சேர்க்கும் விதமாக எல்இடி டிஆர்எல்கள், புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், சேம்பைன் நிற யுஎஸ்டி ஃபோர்க் (முன் பக்கத்தில்), பெரிய ஃப்யூவல் டேங்க், ஸ்பிளிட் வகை இருக்கை, ஸ்பிளிட் வகை டெயில் லைட், அடிப்பகுதியில் எக்சாஸ்ட் உள்ளிட்டவை பல்சர் என்எஸ்400இசட் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பஜாஜ் பல்சர் என்எஸ்400இசட் மாடலில் ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சத்தைக் கொண்டிருக்கும் முதல் பல்சர் பைக் மாடல் இதுவே ஆகும். இத்துடன், பன்முக ரைடிங் மோட்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ப்ளூடூத் இணைப்பு மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதிக் கொண்ட எல்சிடி திரை ஆகியவை இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரையையும் வேறு எந்த பல்சர் பைக் மாடலிலும் பார்க்க முடியவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
பல்சர் என்எஸ்400இசட் ஓட்டுவதற்கு எப்படி இருக்கின்றது?
இந்த பைக்கின் முன் பக்க தோற்றம் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. மற்ற என்எஸ் மாடல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஸ்டைலானதாக என்எஸ்400இசட் இருக்கின்றது. அதவேளையில், சற்று பருமனானதாகவும் காட்சியளிக்கின்றது. எனவே எளிதில் இரண்டு சக்கர வாகன காதலர்களின் மனதை இது கவரக் கூடியதாக இருக்கின்றது.
எஞ்சினின் உச்சபட்ச திறன் உங்களை மீண்டும் மீண்டும் அதை தொட தூண்டும் வகையில் இருக்கின்றது. 8,800 ஆர்பிஎம்மில் மிக துடிப்பான ரைடு அனுபவம் கிடைக்கும். மேலும், உச்சபட்சமான 9,500 ஆர்பிஎம்மில் புதிய அனுபவத்தை, மற்ற எந்தவொரு பல்சர் பைக்கிலும் பெற்றிராத அனுபவத்தை இதில் பெறுவீர்கள். குறிப்பாக, இதில் வழங்கப்பட்டு இருக்கும் ரைடு-பை-ஒயர் அம்சத்தை இயக்கும்போது அதன் வினைத்திறன் மிகப் பெரிய அளவில் மேம்படுகின்றது. அதிலும், ஸ்போர்ட்ஸ் மோட் மிக சிறப்பாக என்ஜாய் செய்ய இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கின்றது. இதன் திறன் வெளியேற்றம் மிக சிறப்பானதாக உள்ளது.
அதேவேளையில், அதிர்வுகளும் கூடவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. மூன்றாம் கியரில் 3,000 மற்றும் 4,000 ஆர்பிஎம் வெளியேற்றும்போது அதிகபட்ச வைப்ரேஷனை உணர முடிகின்றது. இதுதவிர இந்த பைக்கில் அதிக சூடாகும் பிரச்னையும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இதன் சஸ்பென்ஷனும் மிக சிறப்பாக உள்ளது. இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்றதே அது ஆகும். மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும்போதும் மிக சிறப்பாக வளைந்து, நெளிந்த ஏதுவாக இந்த பைக் உள்ளது. எம்ஆர்எஃப் ரெவ்-எஸ் டயரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த டயர் மிக சிறப்பான பங்களிப்பை இயக்கத்தின்போது வழங்குகின்றது.
சாலை வழுக்குவிடுமோ என நினைக்கக் கூடிய சாலையில்கூட மிக சிறந்த இயக்க அனுபவத்தை இந்த டயர்கள் வழங்குகின்றன. இதேபோல், பிரேக்குகளும் மிக சிறப்பான நிறுத்தத்தை வழங்குகின்றன. உச்சபட்ச வேகத்திலும் மிக சிறந்த வேக குறைப்பை அது வழங்குகின்றது. இந்த பைக்கை டிரைவ் செய்து பார்த்ததில் லாங்-டிரைவிற்கு ஏற்ற பைக் என்பதும் தெரிய வந்திருக்கின்றது