முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடன் வழங்குவதை நிறுத்த பஜாஜ் ஃபைனான்ஸுக்கு உத்தரவு!… ரிசர்வ் வங்கி அதிரடி!

08:16 AM Nov 16, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் இரண்டு முக்கிய கடன் திட்டங்களான eCOM மற்றும் Insta EMI Card ஆகியவற்றின் கீழ் புதிய கடன்களை அனுமதிப்பதையும், வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. இந்திய நிதியியல் சந்தையில் வங்கிகளின் இடத்தை குறிப்பாக சிறிய தொகை கடன்களில் NBFC மற்றும் டிஜிட்டல் நிதி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையிலும், இதில் முன்னோடியாக இருக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் புதிய கடன்களை eCOM மற்றும் Insta EMI Card ஆகிய இரு திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

Advertisement

ஆர்பிஐ இன்று இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 45L(1)(b) இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தனது இரண்டு கடன் திட்டங்களின் கீழ் புதிய கடன்களை வழங்குவதையும் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல் விதிகளை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை, இதில் குறிப்பாக eCOM மற்றும் Insta EMI Card ஆகிய இரு திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு இத்திட்டம் குறித்து முக்கியமான உண்மை அறிக்கைகளை வழங்காதது, வழங்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படைதன்மை குறைபாடுகள் இருந்ததை ஆர்பிஐ கண்டுப்பிடித்துள்ளது.

இதன் காரணமாக ஆர்பிஐ உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் ரிசர்வ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குறைபாடுகளை சரி செய்த பின்பு மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.72 லட்சம் அபராதமும், தனியார் துறை கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனமான பெடரல் வங்கி-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதேபோல் KYC விதிமுறைகள் 2016 இன் சில விதிகளுக்கு இணங்காததற்காக மெர்சிடஸ் பென்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் மீது RBI ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது

Tags :
Bajaj Financeகடன் வழங்குவதை நிறுத்த வேண்டும்பஜாஜ் ஃபைனான்ஸுக்கு உத்தரவுரிசர்வ் வங்கி அதிரடி
Advertisement
Next Article