இப்பதான் திருமணமாச்சு.. விவகாரத்தை அறிவித்த பைரவா பட நடிகை!!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, பலரின் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் பைரவா. இந்தப் படத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர், தான் தனது கணவரை விட்டு பிரிவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். மேலும், அவர் இந்த முடிவு நீண்ட யோசனைக்குப் பிறகு எடுத்தது தான் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு வெளியான, கோஹினூர் என்னும் மலையாளத் திரைப்படத்தில் ஆசிப் அலி மற்றும் இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளனர். அந்தப் படத்தில் நடிகை அபர்ணா வினோத், ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும், தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து, 2017ம் ஆண்டு வெளியான பைரவா படத்திலும் கீர்த்தி சுரேஷின் தோழியாக இவர் நடித்துள்ளார். பைரவா படத்தில் இவரது கதாபாத்திரம் பலரின் கவனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து, நடுவன் படத்திலும் இவர் நாயகியாக நடித்தார். இந்நிலையில், இவர் ரில்ராஜ் பிகே என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 2023 ம் ஆண்டு இவர் தனது காதலனை, காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அபர்ணா வினோத் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில், அவர் தனது காதல் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், நீண்ட யோசனைக்குப் பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் இது எளிதான முடிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, திருமணம் வாழ்க்கை உணர்ச்சி ரீதியாக கடினமாக இருந்தது, எனவே முன்னேறுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் கொடுத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி என்று கூறியுள்ளார். திருமணமான இரண்டே வருடத்தில், அபர்ணாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: “ஒழுங்கா என்னோட பேண்டை குடு டி” நடு ரோட்டில் அரை நிர்வாணமாக கட்டி புரண்ட இருவர்..